‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ படங்களிலிருந்து விலகுவதாக நடிகர் ஜானி டெப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
‘சில சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு நான் இந்த அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். முதலில் எனக்கு ஆதரவையும் அன்பையும் வழங்கிய அனைவருக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இரண்டாவதாக, ‘ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ படத்தில் நான் நடித்த கிரிண்டல்வால்ட் என்ற கதாபாத்திரத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் என்னைக் கேட்டுக்கொண்டது என்பதையும் உங்களுக்கு நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். நானும் அவர்களின் வேண்டுகோளை மதித்து ஏற்றுக்கொண்டேன்.
இங்கிலாந்து நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையைச் கூறுவதற்கான எனது போராட்டத்தை மாற்றிவிடாது. மேலும், இந்த வழக்கில் நான் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபிப்பேன். இந்தத் தருணத்தோடு என்னுடைய வாழ்க்கையும், தொழிலும் முடிந்துவிடப் போவதில்லை” என பதிவிட்டுள்ளார் .
ஜானி டெப் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதாக லண்டனில் வெளியாகும் பிரபல பத்திரிகை ஒன்று கட்டுரை வெளியிட்டது. இதற்கு எதிராக ஜானி டெப் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராகவே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.