
அமெரிக்காவின் டென்னசி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தில் இருந்து 12 மைல் தொலைவில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 7பேரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விபத்தின் டார்சன் புகழ் நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா இருவரும் உயிரிழந்தனர்.
க்வென் ஷாம்ப்ளின் 1999ல் டென்னசியின் பிரென்ட்வுட்டில் ஒரு தேவாலயத்தை நிறுவி அதனை நிர்வகித்து வந்தார். கணவன்-மனைவி இருவரும் தேவாலயத்தை நிர்வகித்து வந்த நிலையில் இருவரும் விமான விபத்தில் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Patrikai.com official YouTube Channel