வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன், தன்னுடைய நிர்வாகம் அமைச்சரவையிலும், வெள்ளை மாளிகையிலும், இருந்ததைவிட மிகவும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
78 வயதாகும் ஜோ பைடன் அடுத்த வருடம் ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
ஆப்பிரிக்க அமெரிக்க குழுக்கள், அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜனநாயக கட்சியை சார்ந்த ஜோ பைடனிடம் மாநில செயலாளர், கருவூல செயலாளர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அட்டார்னி ஜெனரல், இந்த நான்கு பெரிய பொறுப்பில் தங்களில் ஒருவரை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதைப் பற்றி ஜோ பைடன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: இது வெள்ளை மாளிகையில் மிகவும் மாறுபட்ட அமைச்சரவை யாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, பல்வேறு குழுக்கள் பல்வேறு பிரிவுகளில் என்னிடம் தங்களது சமூகத்தை சார்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
அனைத்து மாறுபட்ட குழுக்களும் என்னிடம் மீண்டும் மீண்டும் இதைப்பற்றி கேட்டுக் கொண்டிருக்கின்றனர், இதை மிகவும் சிறப்பான ஒரு செயலாக நான் கருதுகிறேன், அமெரிக்காவில் இதுவரை இருந்த இனம், நிறம், பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட செயல்களை விடுத்து, அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் மாறுபட்ட ஒரு ஆட்சியாக இது இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பாக நான் இப்போது எந்த துறையில் என்ன மாற்றங்களை செய்ய போகிறேன் என்பதையும் தெரிவிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினரான கிரிகோரி மீக்ஸ், மிகவும் சக்தி வாய்ந்த வெளியுறவுத்துறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இவர் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் செல்வாக்கு மிக்க பங்கை கொண்ட முதல் ஆபிரிக்க அமெரிக்க தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மேலும் ஜோ பைடன் ஆட்சியின் பொருளாதார குழுவில், ஜேனட் எல்லர் என்பவரை கருவூல செயலாளராகவும், இந்திய அமெரிக்கரான நீரா தந்தனை பட்ஜெட் மேலாண்மை இயக்குனராகவும், ஜார்ட் பர்ன்ஸ்டைன் மற்றும் ஹீத்தர் பாஷி பொருளாதார ஆலோசகர்களின் குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளநர்.
மேலும் ஜோ பைடன் மாநில செயலாளராக ஆண்டோனி பிளிங்கின்னை தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.