புதுடெல்லி:
மெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றியை அறுவடை செய்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று முறைப்படி பதவியேற்பு விழா நடைபெற்றது.

தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேப்பிடல் கட்டடத்துக்கு முன்பு விழா நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று இரவு பத்து மணிக்கு விழா தொடங்கியது. இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் முதலில் துணை அதிபராக பதவியேற்றுக்கொண்டார். பின்னர் அமெரிக்காவில் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவில், அமெரிக்க ஜனநாயகத்தின் புதிய அத்தியாயத்திற்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.