வேலையில்லா இளம் பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கபடும் என ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கோலாட் அறிவித்துள்ளார். இந்த புதிய திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலின் போது வேலையில்லா பட்டதாரிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மாதம் ரூ.600 உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி வெற்றிப்பெற்ற காங்கிரஸ் கட்சி அஷோக் கோலாட் தலைமையில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ வேலையில்லா பட்டாதாரிகளுக்கான மாதந்தோறும் வழங்கும் உதவித்தொகை 600 ரூபாய் இருந்து 3,000 ரூபாயக அதிகரிகப்பட்டுள்ளது. அதேபோன்று பட்டதாரி பெண்களுக்கு ரூ.3,500 வழங்கப்படும். இந்த புதிய திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாநில அசுக்கு ரூ.525 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் ரஜஸ்தான் மாநிலத்தில் தான் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்கவும், பட்டதாரிகளை ஊக்குவிக்கவும் பொருட்டு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தலின் போது வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.5000 வழங்கப்படும் என பாஜக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.