ஸ்ரீநகர்: யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட ஜம்மு காஷ்மீரில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன என்று ஜம்மு காஷ்மீர் முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்துசெய்யப்பட்ட நிலையில், அங்கு என்னமாதிரியான சூழ்நிலை நிலவுகிறது என்றே வெளியில் தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுமதியில்லை. பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டுள்ளது.

மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவைகள் இன்னும் இயங்கவில்லை. இந்நிலையில், அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

“ஜம்மு காஷ்மீரில் படிப்படியாக மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார் ஜம்மு காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோகித் கன்சால்.