ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் காவல் உயரதிகாரி பயங்கரவாதத்தை விட போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதாக கூறி உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் டி ஜி பி வெய்ட் பத்திர்கையாளர்களை சந்தித்து சமீபத்தில் உரை ஆற்றியுள்ளார். அதன் விவரம் வருமாறு:
போதைப் பொருள் அச்சுறுத்தல் மாநிலத்தில் அதிகமாக உள்ளது. பயங்கரவாதத்தை விட இது பெரும் சவாலாக உள்ளது. இந்த வருடம் போதைப் பொருள் கடத்தலுக்காக 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 542 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மருந்துகள் என்னும் போர்வையில் போதை பொருள் வருகின்றன. போலீசாரால் மட்டும் இதை தடுத்து நிறுத்த முடியாது. எல்லைக் காவல் படையினர் உதவ்யும் தேவை. இந்த போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தை இயக்குவது யார் என இப்போது தெரிய வந்துள்ளது. விரைவில் அவர்கள் அனைவரும் பிடி படுவார்கள்” எனக் கூறி உள்ளார்