டில்லி

டந்த வருடம் அமர்நாத் யாத்ரிகர்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலின் போது பயணிகளைக் காப்பாற்றிய இஸ்லாமிய ஓட்டுனருக்கு இந்தியாவின் 2 ஆவது உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 10 ஆம் தேதி அமர்நாத் யாத்திரிகர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.   அந்த வாகனத்தை இஸ்லாமியரான ஷேக் சலிம் காஃபுர் என்னும் ஓட்டுனர் செலுத்திக் கொண்டிருந்தார்.    அந்த சமயத்தில் திடீரென தீவிரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.    7 யாத்ரிகர்கள் இந்த தாக்குதலில் மரணம் அடைந்தனர்.

அந்த தாக்குதலின் போது ஓட்டினர் ஷேக் தைரியமாக பேருந்தை விரைவாக ஓட்டிச் சென்று பல பய்ணிகளின் உயிரைக் காப்பாற்றினார்.    அவரது இந்த தீரச் செயலை அப்போது பொதுமக்களும்,  பத்திரிகைகளும் வெகுவாக பாராட்டினர்.    மதத்தை மிஞ்சிய மனித நேயம் கொண்டவர் என புகழாரம் அவருக்கு சூட்டப்பட்டது.

குடியரசு தினத்தை முன்னிட்டு தற்போது மத்திய அரசு வீர தீர செயல்களைப் புரிந்தவர்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.   அதில் ஷேக் சலீமுக்கு இந்த பிரிவின் இரண்டாவது உயரிய விருதான ஜீவன் ரக்‌ஷா பதக் என்னும் விருதினை அறிவித்துள்ளது.    மத்திய அரசு இவருக்கு விருது மற்றும் ரூ. 1 லட்சம் பணம் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.

இந்தப் பிரிவில் உயரிய விருதுகளில் முதலாம் இடத்தில் உள்ள விருதின் பெயர் சர்வோத்தம் ஜீவன் ரக்‌ஷா பதக் ஆகும்.