காரைக்கால்:

ஜிப்மர் காரைக்கால் கிளைக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.497.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் ஜிப்மர் வளாகத்தில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய சுகாதார துறையின் ரூ.491.7 மதிப்பு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கல்வி பிரிவு, குடியிருப்பு, செவிலியர் விடுதி ஆகியவை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிப்மர் கிளை புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இதன் விரிவாக்கத்திற்கு புதுச்சேரி அரசு காரைக்கால் கோவில்பத்து பகுதியில் 41.47 ஏக்கர் மற்றும் காமராஜ் சாலையில் 38.14 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளது.

இந்த பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. புதுச்சேரி பொதுப் பணி துறைக்கு சொந்தமாக அரசலாறு பகுதியில் உள்ள கட்டடத்தையும் ஜிப்மருக்கு வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நிர்வாக வசதிகளுக்கு என ரூ. 30 கோடியை ஜிப்மர் செலவிடுகிறது. இந்த கட்டுமான பணிகள் முடிந்துவிட்டால் காரைக்கால் கிளையில் தற்போது எம்பிபிஎஸ் பயிலும் 50 மாணவர்கள் என்ற எண்ணிக்கை 100ஆக உயரும்.