டெல்லி:  ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள் அதிரடி உயர்த்தப்படுவதாக  அறிவிப்பு வெளியான நிலையில், பொதுமக்கள் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையை முழுமையாக செயல்படுத்தி உள்ள நிலையில், மொபைல் கட்டணங்களை உயர்த்திருப்பது சாமானிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மோடி அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

மக்களின் அன்றாட தேவையில்  மொபைல் போன்  இன்றியமையானதாக மாறியுள்ள நிலையில், தற்போது திடீரென மொபைல் போனுக்கான  கட்டணங்களை 25 சதவிகிதம் அளவுக்கு பிரபல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இன்றைய நிலையில், பொதுமக்கள் அனைத்து வகையான பண பரிவர்த்தனைகளையும் மொபைல் போன் மூலம் மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கான கட்டணங்களை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அரிசி,  காய்கறிகள், உணவுபொருட்கள் வரலாறு காணாத அளவில்  விலை உயர்ந்து வரும் நிலையில், தற்போது மொபைல் ரிசார்ஜ் கட்டணமும் உயர்ந்துள்ளது பொதுமக்களின் தலையில் விழுந்த இடியாக கருதப்படுகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து சேவைகளும் டிஜிட்டல் மயமாகி உள்ளது. இதை பெருமையலாக பீற்றிக்கொள்ளும் மோடி அரசு,  அதற்கான வசதி வாய்ப்புகளை குறைந்த செலவில்  வழங்க வேண்டியது கடமை. ஆனால்,  அதை செய்யாமல் தனியார் மயத்தை ஊக்குவிக்கும் வகையில், மொபைல் கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்கி உள்ளது. இது மோடி அரசு,  தனது மக்கள் பணியில் இருந்து ஒதுக்கி இருப்பதையே வெளிக்காட்டுகிறது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது ரிசார்ஜ்  கட்டணத்தை  சுமார் 25 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவித்து உள்ளதுபொதுமக்களிடையே மத்திய அரசுமீது  கடுமையான அதிருப்தியை  ஏற்படுத்தி உள்ளது.  , தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் கொள்ளையடிக்க மோடி அரசு துணைபோவதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ரிலையன்ஸ் ஜியோ தனது கட்டணத் திட்டங்களை கணிசமாக உயர்த்தியதற்காக அம்பானி வீட்டு திருமணத்தை தொடர்புபடுத்தி  சமூக வலைதளங்களல் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்த  வருகின்றனர். மோலம்  மோடி அரசையும் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி எற்று ஒருவாரம்கூட ஆகாத நிலையில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவித்து உள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசு பணக்காரர்களின் அரசு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

ஜியோ கட்டண உயர்வு அறிவிப்பு:

ரிலையன்ஸ் ஜியோ (Jio) தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலையை 15% முதல் 25% வரை உயர்த்தியுள்ளது.

ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளது. மலிவு விலையில் இணைய சேவையை வழங்குவதில் உறுதியாக இருப்பாதகவும் வேகமாக வளர்ந்துவரும் 5G நெட்வொர்க் வாடிக்கையாளர்களில் 85% பேரை ஜியோ பெற்றிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

புதிய கட்டண அறிவிப்பின்படி, ஒரு மாதத்திற்கான 2GB டேட்டா பிளான் ரூ.189 விலையில் கிடைக்கும். தினசரி 2.5GB வழங்கும் வருடாந்திர திட்டத்திற்கு ரூ.3,599 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் 2GB அல்லது அதற்கு மேல் டேட்டா வழங்கப்படும் அனைத்து திட்டங்களுக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

“எல்லா இடங்களிலும் உயர்தர இணைய சேவை மலிவு விலையில் கிடைப்பது டிஜிட்டல் இந்தியாவின் முதுகெலும்பாகும். இதற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்கிறது. ஜியோ எப்போதுமே நமது நாட்டுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும். இந்தியாவின் நலனுக்காக தொடர்ந்து முதலீடுகள் செய்வோம்” என்று ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் டேட்டா நுகர்வு மற்றும் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு பரவலாக்கப்பட்டதில் ஜியோ குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. டெலிகாம் சந்தையில் ஜியோ நிறுவனத்தின் நுழைவவால் போட்டியாளர்கள் கட்டணங்களைக் குறைக்கவும் சேவையின் தரத்தை மேம்படுத்தவும் நெருக்கடி உருவானது.

கட்டண உயர்வுடன் JioSafe மற்றும் JioTranslate சேவைகளையும் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ சேஃப் மாதம் ரூ.199 விலையில், பாதுகாப்பான போன் கால், மெசேஜிங் மற்றும் டேட்டா பரிமாற்ற வசதிகளை வழங்குகிறது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும் ஜியோ டிரான்ஸ்லேட், மாதத்திற்கு ரூ. 99 விலையில் கிடைக்கும். இது வாய்ஸ் கால், டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் படங்களை மொழிபெயர்க்க உதவுகிறது. இதன் மூலம் வெவ்வேறு மொழிகளுக்கு இடையே தொடர்புகொள்ளும் வசதியை அதிகரிக்கிறது. இந்த இரண்டு சேவைகளும் ஜியோ பயனர்களுக்கு ஓர் ஆண்டுக்கு இலவசமாகவே கிடைக்குமாம்.

புதிய கட்டணத் திட்டங்கள் ஜூலை 3-ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.

புதிய விலையின்படி, இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் ரூ.239 திட்டம் ரூ.299 ஆகிவிட்டது.

ரூ.239 திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள்.

அதேபோல், மலிவான ப்ரீபெய்ட் திட்டம் ரூ.155க்கு இருந்தது. இப்போது அது ரூ.189க்கு கிடைக்கும்.

கட்டண உயர்வுக்கு பின் உள்ள திட்டங்கள்:

28 நாட்கள் – ரூ.189 – 2ஜிபி/மாதம்
28 நாட்கள் – ரூ.249 – 1ஜிபி/நாள்
28 நாட்கள் – ரூ.299 – 1.5 ஜிபி/நாள்
28 நாட்கள் – ரூ.349 – 2 ஜிபி/நாள்
28 நாட்கள் – ரூ.399 -2.5ஜிபி/நாள்
28 நாட்கள் – ரூ.449 – 3 ஜிபி/நாள்
56 நாட்கள் – ரூ.579 – 1.5 ஜிபி/நாள்
56 நாட்கள் – ரூ.629 – 2 ஜிபி/நாள்
84 நாட்கள் – ரூ.479 – 6 ஜிபி
84 நாட்கள் – ரூ.799 – 1.5 ஜிபி/நாள்
84 நாட்கள் – ரூ.859 – 2 ஜிபி/நாள்
84 நாட்கள் – ரூ.1199 -3ஜிபி/நாள்
336 நாட்கள் – ரூ.1899- 24 ஜிபி
365 நாட்கள் – ரூ.3599 – 2.5 ஜிபி/நாள்
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்., எலோன் மஸ்க்கின் SpaceX-ஐ பரிசீலிக்கும் நாசா
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்., எலோன் மஸ்க்கின் SpaceX-ஐ பரிசீலிக்கும் நாசா
ரூ.15 இன் Data Add-On இப்போது ரூ.19
மாதாந்திர மற்றும் லான்ச் டேர்ம் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை அதிகரிப்பதுடன், Data Add-Onகளின் விலைகளையும் நிறுவனம் அதிகரித்துள்ளது.

அதாவது டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு கூடுதல் டேட்டா எடுக்கும் திட்டங்களின் விலைகளையும் நிறுவனம் அதிகரித்துள்ளது.

1ஜிபி Data Add-On-ன் விலை ரூ.15 ஆக இருந்தது, இப்போது அதற்கு ரூ.19 செலுத்த வேண்டும்.

புதிய Data Add-On திட்டங்கள்இ. ரூ.19 – 1 ஜிபி, ரூ.29 – 2 ஜிபி, ரூ.69 – 6 ஜிபி

ஜியோவை தொடர்ந்து ஏர்டெல்  நிறுவனமும் கட்டண உயர்வை அதிரடியாக அறிவித்த உள்ளது. இந்த கட்டண உயர்வும் ஜுலை 3ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவித்து உள்ளது.

Airtel Recharge: ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்-பெய்ட் சேவைகளுக்கான ரீசார்ஜ் கட்டணத்த்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 399 ருபாயாக இருந்த மாதந்திர சேவைக்கான கட்டணம் தற்போது 449 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று 499 ரூபாயாக இருந்த சேவைக்கான கட்டணம் 549 ரூபாயாகவும், 599 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சேவைக்கான கட்டணம் 699 ரூபாயாகவும், 999 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சேவைக்கான கட்டணம் ஆயிரத்து 199 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.