முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் ஜியோ குரூப் டாக் (Jio Group Talk) எனும் புதிய ஆண்ட்ராய்டு செயலியை கடந்த மாதம் இறுதியில் அறிமுகப்படுத்தியது.

இந்த ‘ஜியோ குருப் டாக்’  செயலி மூலம்  ஒன்றுக்கும் மேற்பட்டோருடன் கான்பிரன்ஸ் அழைப்பு போல குழுவாக பேச முடியும் பேசும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதி முதலில் ஜியோ சந்ததாரர்களுக்காக  அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது  மற்ற செல்பேசி சேவை பயனாளிகளையும் அழைத்து பேசும் வகையில் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில் குரல் மூலமாக மட்டுமே இதில் தொடர்பு கொள்ள முடியும். அடுத்த கட்ட மாக வீடியோ அழைப்பு வசதியும் இடம்பெறும் என ஜியோ  தெரிவித்து உள்ளது.

இந்த ஜியோ குருப்  டாக் செயலி  மூலம் கான்பிரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளும் போது, பயனாளர்கள் எப்போது மற்றவர்களை சேர்க்க வேண்டும், அல்லது எப்போது அவர்களின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதியும், எந்தவொரு  தனி நபரையோ அல்லது குரூபையோ மியூட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள  லெக்சர் மோடு எனும் புதிய வசதி   இதர குரூப் கான்பிரன்ஸ் அழைப்பு களில் இருப்பவர்களை மியூட் செய்யலாம்.

ஜியோ குருப்  டாக் செயலி தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள்  தளத்தில் மட்டுமே பயன் படுத்த முடியும்.