மும்பை: வரும் தீபாவளி முதல் சென்னை உள்பட 4 நகர்ப்புறங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என தெரிவித்துள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி, 2023ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும 5ஜி இணைய சேவை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை மாதம்  26 ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக நடைபெற்ற ஏலம் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்தது. அதாவது 5ஜி அலைக்கற்டிற ஏலம்  கடந்த ஜூலை 26 ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக நடைபெற்ற ஏலம் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்தது.

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5G அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. அதாவது, ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக அதானி குழும நிறுவனம் 212 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற  ஜியோ நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முகேஷ் அம்பானி உள்பட பங்குதாரர்கள், அதிகாரிகள், என பல தரப்பினர் கலந்து கொண்டனர். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, வரும் தீபாவளி முதல் 5 ஜி சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக  சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் தீபாவளி பண்டிகை முதல் 5 ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பேசிய முகேஷ் அம்பானி,   தீபாவளி பண்டிகை முதல் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக 4 நகரங்களில் வழங்கப்படுகிறது. டிசம்பர் 23ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் 5ஜி சேவை வழங்கப்படும். அடுத்த 18 மாதங்களுக்குள் 100 மில்லியன் வீடுகளை அதிவேக இணைய பயன்பாட்டின் மூலம் இணைக்க திட்டமிட்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.