ராஞ்சி
இன்று ராகுல் காந்தி விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என ஜார்க்கண்ட் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அப்போதைய பா.ஜனதா தலைவர் அமித்ஷா பற்றி கடுமையாக விமர்சனம் செய்ததாக அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுஅங்குள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் இது பற்றிய வழக்கு நடந்து வருகிறது.
விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி, ராகுல்காந்தி தரப்பில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் முறையிடஒஅட்டதால் வாரண்டை பல மாதங்கள் நிறுத்தி வைத்து இருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம், உயர்நீதிமன்றம் ராகுல்காந்தியின் மனுவை தள்ளுபடி செய்ததது
நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மீண்டும் ராகுல்காந்தியின் வழக்கறிஞர் முறையிட்தும் நிராகரிக்கப்பட்டதால் ராகுல்காந்தி இன்று (திங்கட்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும் என்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுபிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
[youtube-feed feed=1]