ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதல்வராக ஜார்கண்ட்புலி என அழைக்கப்படும் சாம்பாய் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்து கட்டித் தழுவி வாழ்த்தினார்.
ஜார்கண்ட் முதலமைச்சராக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட் ஹேமந்த் சோரன் மனைவி கல்பான சோரன் பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அவரது அமைச்சரவை சகாவான சாம்பாய் சோரன், மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், மீது நிலச்சரி சங்க முறைகேடு, நில மோசடி மற்றும் பண மோசடி என ஏராளமான வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை நேற்று முன்தினம் கைது செய்தனர். முன்னதாக 10 முறை சம்மன் அனுப்பியும் முறையாக விசாரணைக்கு ஆராராகாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அவர் பிர்சா முண்டா மத்திய சிறையில் ஹேமந்த் சோரன் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, தான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் அறிந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை அதிகாரிகளுடம் வாக்குமூலம் அளித்த போதே தனது ராஜினமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி விட்டதாக கூறினார். இதனால், அவரது கைது செய்யப்பட்டதும், அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்து. இதையடுத்து மாநில முதல்வராகப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அடுத்த முதல்வராக ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் பதவி ஏற்கலாம் என்றும், அவரை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல்கள் பரவின.
ஆனால், அதற்கு நேற் மாறாக, ஜார்க்கண்ட் முக்கி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவரான சாம்பாய் சோரன் அடுத்த முதல்வராக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில். தேர்வு செய்யப்பட்டார். சாம்பாய் சோரன் அடுத்த முதல்வராக அக்கட்சியின் 43 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். இதையடுத்து, ஆதரவு எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து, அவர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர், இன்று ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் சாம்பாய் சோரனுக்கு ஜார்கண்ட் முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவரை கட்டி அணைத்து ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.
ஜார்க்ண்ட் மாநில புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ள சாம்பாய் சோரன் 10ம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். இவர் ஜார்க்ண்ட் மாநிலத்தின் சாராய்கேலா கார்சவான் மாவட்டத்தின் ஜலின்கோட்டா கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மகன். இவரது தந்தை பெயர் சிமால் சோரன். இவர் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாய பணிகளை செய்து வந்தார். 10ம் வகுப்பு வரை அரசு பள்ளி வரை படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
சாம்பாய் சோரன் கடந்த 1990 காலக்கட்டத்தில், ஜார்கண்ட் புதிய மாநிலமாக உருவாக வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்போதைய மறைந்த ஷிபு சோரனுடன் இணைந்து போராட்டத்தில் தீவிரமாக கலந்துகொண்டு அரசியலுக்குள் கால் பதித்தவர், இவரை அப்பகுதி மக்கள், ‛ஜார்கண்ட் புலி’ என்ற அழைப்பார்களாம்,.
இவர் முதன்முதலா,க சரைகேலா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தார். இவர் முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியும் பல்வேறு துறை அமைச்சராக செயல்பட்டார். இப்போதைய காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது முதலமைச்சராக மாறி உள்ளார்.