ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள  ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம்  ஜாமீன் வழங்கி   உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட்  மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை சுமார் 7மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், 2024ம் ஆண்டு பிப்ரவரி 1ந்தேதி அவரை அதிரடியாக கைது செய்தது.

முன்னதாக, ஜார்க்கண்ட்  மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகுமாறு  அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், அவர் ஆஜராக நீதிமன்றமும் உத்தரவிட்டதால்,  அவரிடம் அமலாக்கத்துறை ஜனவாரி மாதம் இறுதியில் விசாரணைகளை நடத்தி வந்தது. இதையடுத்து டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில்  அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அங்கிருந்து, ரூ. 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத் துறை கைப்பற்றியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஜனவரி 31ந்தேதி அன்று  மாலை அமலாக்கத்துறை ராஞ்சியில்  உள்ள  முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் குவிக்கப்பட்டனர்.  இதையடுத்து,  ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்தை சுற்றி 100 மீட்டர் தொலைவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவ படையினர், போலீஸார் குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து,  பிற்பகல் 2 மணி முதல் முதல்வர் ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதை கண்டித்து ஜேஎம்எம் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.   இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரனின் நெருங்கிய ஆதரவாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சம்பய் சோரன் பதவியேற்றார்.

இதற்கிடையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹேமந்த் சோரன் மீதான ஜாமின் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று ஜாமின் வழங்கி ராஞ்சி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நில மோசடி வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

ஹேமந்த் சோரன் மீத ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதால், அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது சந்தேகமே.

வழக்கு விவரம்:

ராஞ்சி மாவட்டத்தின் அங்காரா தொகுதியில் 0.88 ஏக்கருக்கு கல் குவாரி சுரங்க குத்தகை ஜூன் 2021 இல் மாவட்ட சுரங்கத் துறையால் ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில முதல்வருக்கு மாநில அரசே குத்தகைக்கு வழங்கியது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநில  ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் சமீபத்தில் அரசியலமைப்பின் 192 பிரிவின் கீழ் இந்த விஷயத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினார். தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை தகுதி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு இந்த விதி அதிகாரம் அளிக்கிறது.

RPA, 1951 இன் பிரிவு 9A இன் கீழ் ஆளுநர்களின் குறிப்பை EC ஆராய்வதாக முதன்முதலில் ET அறிக்கை அளித்தது, இது அரசாங்க ஒப்பந்தங்களைச் சொந்தமாக வைத்திருப்பது போன்ற காரணங்களால் சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்கிறது. “அவரது வர்த்தகம் அல்லது வணிகத்தின் போது அந்த அரசாங்கத்திற்கு பொருட்களை வழங்குவதற்கு அல்லது அந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வேலையையும் நிறைவேற்றுவதற்கு பொருத்தமான அரசாங்கத்துடன் அவர் செய்துகொண்ட ஒப்பந்தம் உள்ளது”.

ஜூன் 2021 இல் சோரனுக்கு ஒதுக்கப்பட்ட சுரங்க குத்தகை உரிமத்தின் ஒரு பகுதியாக மாநில அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் அதே பிரிவின் கீழ் ஆய்வு செய்யப்பட்டன. சுரங்கங்கள் மற்றும் கனிமங்களின் அகழ்வாராய்ச்சி அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்படுகிறது மற்றும் பொதுவாக ‘ஒப்பந்தங்கள்’ என்று வாசிக்கப்படும் வருவாய் பகிர்வை உள்ளடக்கியது.

இந்த வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை, விசாரணைக்க ஆஜராக சோரனுக்கு உத்தரவிடும்படி, ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தை நாடியது. அதைத்தொடர்ந்தே அவர் விசாரணைக்கு ஆஜரானார். அதன்பிறகே கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இது முதல்வர் தனது  அலுவலகத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.  இதுவும் ‘ஆதாய அலுவலகம்’ மற்றும் பதவியில் உள்ள முதல்வர் மீது தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என  கூறப்பட்டது.

இதுதொடர்பான விசாரணையின்போது,  சுரங்க குத்தகை தவறுதலாக முதலமைச்சருக்கு வழங்கப்பட்டு  விட்ட மாநில அரசு நீதிமன்றத்தில் வாதிட்டது, ஆனால் உயர்நீதிமன்றம் ஏப்ரல் 8ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. முன்னாள் முதல்வர் ரகுபர்தாஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஆளுநரிடம் இது குறித்து முறையிட்டனர். . 2021 செப்டம்பரில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அங்காரா ஸ்டோன் டெபாசிட்டில் சுரங்கம் எடுப்பதற்காக சோரனுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதாக புகார்கள் கூறுகின்றன.

மாவட்ட சுரங்க அலுவலகம் ஜூலை 2021 இல் சுரங்கத்தை மூடுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. துறைகளின் கீழ் உள்ள ஏஜென்சிகள் சுரங்க முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்த காலகட்டத்தில், சுரங்கங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் போர்ட்ஃபோலியோவை சோரன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.