ராஞ்சி: ஜார்க்கண்டில் புதிய தளர்வுகள் ஏதுமின்றி செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு மாநில உள்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுகிறது. அரசின் விதிமுறைகளை மக்கள் தவறாது பின்பற்ற வேண்டும்.

புதிய வழிகாட்டுதலில் சிறப்பு விலக்கு எதுவும் இவில்லை. அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார மற்றும் மத நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஊர்வலங்கள் மற்றும் பிற பெரிய நிகழ்வுகள் நடத்துவதில் தொடர்ந்து தடை நீடிக்கும்.

கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் மூடப்படும். சினிமா அரங்குகள், நீச்சல் குளங்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள், சட்டசபை அரங்குகள் மற்றும் பிற அரங்குகள் மூடப்பட்டிருக்கும். பொது போக்குவரத்து இருக்காது என்று கூறப்பட்டு உள்ளது.