இந்திப் படங்களில் மட்டும் நடித்து வரும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை தெலுங்கில் அறிமுகப்படுத்த பலரும் முயன்றனர்.
இந்த நிலையில், ஜுனியர் என்டிஆரின் 31-வது படத்தில் நடிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஜான்வி கபூரை அணுகியுள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படத்தை கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார்.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்போது பாலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரம். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பார்வையாளர்களை கலங்கடிப்பது இவரது வாடிக்கை.