சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக அறிவித்ததை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் தங்கவேலு என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்  மனுவில் கூறியிருப்பதாவது,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை, நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த 17-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டினால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற முடியாது. அவ்வாறு மாற்றினால் அது சட்ட விரோதமாகும்.

மேலும், சொத்துகுவிப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்து பண பரிவர்த்தனையும், போயஸ் கார்டன் வீட்டில் தான் நடந்துள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.

அப்படிப்பட்ட வீட்டை நினைவு இல்லமாக அரசு மாற்றினால், அது தவறான முன்உதாரணமாகி விடும். எனவே, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் ‘வேதா’ இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும்.

முதல்- அமைச்சரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.