
சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 3 பேருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் இன்று ஜெயா டிவி விவேக் இரண்டாவது முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜராக மருத்துவர் சிவக்குமார், முன்னாள் தலைமை செயலாளர் வெங்கட்ராமன், ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விசாரணை ஆணையத்தில், மார்ச் 12ம் தேதி பூங்குன்றன் மீண்டும் ஆஜராகவும், மார்ச் 14ல் மருத்துவர் சிவக்குமார், மார்ச் 15ல் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel