சென்னை:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர்.சமாதி அமைந்துள்ள வளாகத்திலேயே நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை தொடங்கியது.

நினைவு மண்டபம் கட்டுவதற்கான யாகசாலை பூஜைகள் இன்று காலை 6.30 மணி அளவில் தொடங்கியது. இதில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.தொடர்ந்து 9 மணி அளவில் அடிக்கல் நாட்டும் பணி நடைபெற்றது..

டந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி முன்னாள் முதலமைச்சா ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜிஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்திலேயே 50 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜுன் மாதம்  அறிவித்தது.

அதைத்தொடர்ந்துஜெயலலிதா நினைவு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக முதல்வர், துணை முதல்லவர் முன்னிலையில், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டனர்.