சென்னை: 

டந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி உடலநலமில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தனியார் தொலைக்காட்சி ஒன்று, அன்று இரவு நடைபெற்ற நிகழ்வுகளை வெளியிட்டு உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 21ந்தேதி,  சென்னை பரங்கி மலை முதல் ஏர்போட் வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகள் முடிவுற்றதால்  ரெயில் சேவையை காணொளி காட்சி மூலம்   தலைமை செயலகத்தில் இருந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

அதற்கு அடுத்த நாளான 22ந்தி இரவு அவர் உடல்நிலை மோசமடைந்ததாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை சிகிச்சைக்கு அழைத்துச்சென்ற அப்பல்லோ ஆம்புலன்சின் கேர் ரிப்போர்ட் தற்போது வெளியாகி உள்ளது. அதில், அவரது உடல்நிலை போயஸ் தோட்ட இல்லத்தில் எப்படி இருந்தது என்பது குறித்து தெளிவாகி உள்ளது.

 

அதில், கடந்த (2016) ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி இரவு போயஸ் கார்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து 3 மருத்துவர்கள் கொண்ட குழு போயஸ் கார்டன் விரைந்து அவரை பரிசோதித்ததாக கூறி உள்ளது.

அன்று இரவு 10 மணிக்கு அப்பல்லோவுக்கு முதல்வரின் போயஸ் இல்லத்தில் இருந்து அழைப்பு வந்ததாகவும், உடனே 10.01 மணிக்கு அப்பல்லோ ஆம்புலன்சு புறப்பட்டு 10.05 மணிக்கு அவரது வீட்டை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உடனே ஆம்புலன்சில் வந்த மருத்துவக்குழுவினர், முதல்மாடியில் இருந்த அவரது அறைக்கு சென்றனர். அங்கே, படுக்கையில் ஜெயலலித அன்கான்சியசில் இருந்தார். அவரை அழைத்தபோது, அவரிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. உடனடியாக அவரக்கு முதலகட்ட மருத்து சோதனைகள் செய்யப்பட்டது.

அப்போது அவரது  சுகர் அளவு 508 இருந்தாகவும், மூச்சுத்திணறல் காரணமாக அவரது சுவாசம் குறைந்து இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர்கள் ஆம்புலன்ஸ் உதவியோடு ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.

 

அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவ பரிசோதனை செய்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் அவரது உடலில் ரத்த அளவு அபாய அளவில் இருந்ததை உறுதி செய்கிறது.

அவரது உடலில் காயமோ, புண்களோ இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முதல்வராக இருக்கும் ஒருவருக்கு 24 மணி நேரமும் காவலர் பாதுகாப்பும், மருத்துவ வசதியும் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது எந்தவித மருத்துக்குழுவினரும் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.