சென்னை:
திமுக தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி திட்டம் சேர்க்கப்படும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள, திமுக, அதிமுக உள்பட பல கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளன.
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்றும், கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும், மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை, 10ம் வகுப்பு வரை படித்த சுமார் 50 லட்சம் பெண்கள் மக்கள் நலப்பணி யாளர்களாக நியமிக்கப்படுவார்கள், விவசாய கடன் தள்ளுபடி, நியுட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் உள்பட பல்வேறு மக்கள் நல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில், தற்போது, பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, நகைக் கடன் தள்ளுபடி திட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
அதன்படி, கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை அடகு வைத்த நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.