சென்னை

ரவணபவன் உரிமையாளர் அண்ணாச்சியால் பாதிக்கப்பட்ட ஜீவஜோதியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உள்ளது.

சரவணபவன் உணவகத்தில் பணி புரிந்தவர் மகளான ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடந்த 2011 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் தமிழகத்தை பரபரப்புக்குள்ளாக்கியது.  சரவணபவன் உரிமையாளரும் அண்ணாச்சி என அழைக்கப்படுபவருமான ராஜகோபால் ஆள் வைத்து இந்த கொலையைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இதையொட்டி ராஜகோபால் கைது செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது.  ஆனால் அவர் தொடர்ந்து மேல் முறையிடு செய்து வந்தார். ஜீவஜோதியும் தொடர்ந்து 18 ஆண்டுகள் அவருக்கு எதிராக வழக்காடி வந்தார்.  இறுதியாக உச்சநீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை அளித்தது.

உடல்நிலையைக் காரணம் காட்டி ராஜகோபால் சிறைக்குச் செல்லவில்லை.  இந்நிலையில் உடல்நிலை பாதிப்பால் ராஜகோபால் மரணம் அடைந்தார்.  ராஜகோபாலுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க 18 ஆண்டுகள் போராடிய ஜீவஜோதியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உள்ளது. இந்த படத்தை பவானி ஐயர் திரைக்கதையுடன் பாலிவுட் ஜங்கிள் பிக்சர் தயாரிக்க உள்ளது.