டெல்லி: ஜேஇஇ முதன்மைத் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளில் சோக்கை பெற ஜேஇஇ மெயின் ஜெஇஇ அட்வான்ஸ்டு என இருவு தேர்வுகளை எழுத வேண்டும். இந்த தேர்வுகள் ஆண்டுகளுக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இதில் தேர்வு பெற்றவர்கள், என்ஐடி, ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முயும்.
ஜேஇஇ மெயின் 2022, நாட்டிலுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வாகும். JEE மெயின் செயல்திறன் அடிப்படையில், அதிக மதிப்பெண் பெற்றவர்கள் JEE Advanced 2022 இல் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள்.
JEE மெயின் தாள் 1, அல்லது BTech தாள், மற்றும் தாள் 2 அல்லது BArch மற்றும் BPlaning தாள் ஆகிய இரண்டு தாள்களுக்கு நடைபெறும். BArch மற்றும் BPlanning தாள்கள் முறையே தாள் 2A மற்றும் தாள் 2B என தனித்தனியாக நடத்தப்படும்.
பிஇ மற்றும் பிடெக் படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தாள் 1 இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு கணினி அடிப்படையிலான முறையில் நடத்தப்படும். தாள் 2A மற்றும் தாள் 2B க்கு கணிதம் மற்றும் திறன் தேர்வு பொதுவானதாக இருக்கும் போது, வரைதல் தேர்வு மற்றும் திட்டமிடல் முறையே கட்டிடக்கலை மற்றும் BPlaning படிப்புகளுக்கு மட்டுமே இருக்கும். இந்த தேர்வானது 3 மணிநேரம் நடைபெறும்.
இந்த தேர்வானது ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் நடைபெறும். நாடு முழுவதும் நடைபெறும் இத்தேர்வில் அனைத்து தேர்வு மையங்களிலும் ஆங்கில மொழியில் கேள்விகள் கேட்கப்படும். மாநிலங்களைப் பொறுத்து, இதர மொழிகளில் கேள்விகள் இடம்பெறுவது மாறுபடும். JEE மெயின் தேர்வு எழுத எந்தவிதமான வயது வரம்பும் கிடையாது.
இத்தேர்வை, 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதி பெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். 2020 அல்லது 2021 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 2022 ஆம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் JEE மெயின் – 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்திய மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஏற்கனவே ஜெஇஇ முதன்மை தேர்வு ஏப்ரலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜெஇஇ ஒருங்கிணைந்த முதற்கட்ட நுழைவுத் தோகள் வரும் ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்வுகள் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
அதாவது, JEE Mains 2022 தேர்வு ஏப்ரல் 21, 24, 25, 29, மற்றும் 1, 4, 2022 ஆகிய தேதிகளில் நடைபெறும். JEE Mains 2022 க்கான திருத்தப்பட்ட அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த சந்தேகங்களுக்கு jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தேசிய முகமை தெரிவித்துள்ளது.