சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்தபடி, இன்று ஜெஇஇ மெயின் தேர்வுகள் தொடங்கி உள்ளது.  நாடு முழுவதும் 660 மையங்களில்ஜேஇஇ தேர்வு நடைபெறுகிறது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்துள்ளர்களா என்பது கண்காணிக்கப்பட்டு, அவர்களின்  உடல்வெப்ப நிலை பரிசோதனை பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் முழுவதும் கைகள் சுத்தப்படுத்தப்பட்டு தேர்வு ஹாலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என அரசியல்கட்சிகள் வலியுறுத்திய நிலையில்,  உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடப்பட்டது. ஆனால், வழக்கை   உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், மத்திய அரசு தேர்வுகள் குறிப்பிட்ட நாள்களில் கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்துள்ளது.

அதன்படி,  ஜேஇஇ முதல்நிலை தேர்வு இன்று முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் 660 மையங்களில் 9,53,473 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

தமிழகத்தில் 34 மையங்களில் 53,765 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். கொரோனா காரணமாக தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுகிறது. சமூக இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) ஜே.இ.இ முதன்மைத் தேர்வை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.  பேப்பர் 2 க்கு பி.ஆர்ச் மற்றும் பி.பிலான் மாணவர்களுக்கானது.

பொறியியல் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 6 ஆம் தேதி வரை 660 மையங்களில் பல அமர்வுகளில் நடைபெறும்.

கூட்டு நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) முதன்மை 2020 இன் தாள் 1 என்ஐடிகள், ஐஐடிகள் மற்றும் சிஎஃப்டிகளில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கானது.

மருத்துவ நுழைவுத் தேர்வு – தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) செப்டம்பர் 13, 2020 அன்று மருத்துவ மற்றும் பல் சேர்க்கைக்காக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 12.75 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) க்கான நுழைவு அட்டைகளை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

மேலும் 7.78 லட்சம் மாணவர்கள் ஜே.இ.இ (கூட்டு நுழைவுத் தேர்வு) நுழைவு அட்டைகளை பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.