முசாபர்பூர்,

நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்பவர்களை வழிமறித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ள பெண்கள் கும்பல் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளையில் ஈடுபட்ட இளம்பெண்கள் அனைவரும் 30 வயதுக்குட்டவர்கள் என்பதும், அவர்கள் ஜீன்ஸ், டீசர்ட் அணிந்துகொண்டு, ஆண்களை போல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பீகார் நெடுஞ்சாலையில் கொள்ளையில் ஈடுபட்ட இந்த இளம்பெண்கள் கொண்ட கொள்ளை கும்பல் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.

கடந்த வெள்ளிக்கிழமை பீகாரில் இருந்து பாட்னா செல்லும் தேசிய  நெடுஞ்சாலையில் இந்த இளம்பெண்களை கொண்ட கொள்ளை கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது.

அப்போது,  அந்த வழியாக வந்த முசாபர்பூர்  நகர போலீசார் கொள்ளை கும்பலை  சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் இந்த கொள்ளைகும்பலை சேர்ந்த அனைவரும்,  முசாபர்பூர் அருகே உள்ள மாரிபூர் நகரிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்து, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் கைது செய்து  காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த இளம்பெண்களை கொண்ட கொள்ளைகும்பல் ஆண்களை போல ஜீன்ஸ், டிசர்ட் அணிந்து கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் காரில் செல்பவர்களை மடக்கி கொள்ளையடித்து வந்துள்ளனர்.

பெரும்பாலும் நடுத்தர வயதுள்ள ஆண்கள் இரு சக்கர வாகனங்களில் வந்தால், அவர்களிடம் லிப்ட் கேட்பதுபோன்று நாடகமாடி அவர்களை மடக்கி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் உடமைகளை கொள்ளையடித்து வந்துள்ளனர். கொள்யைடிக்கும்போது இவர்கள் வெறித்தனமாக தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பல்வேறு புகார்களை குவிந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் விவேக்குமார் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதையடுத்து பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி ரோந்து பணிகளின் மூலம் சுமார் 30க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறினார்.

மேலும்,  கொள்ளையில் ஈடுபடும் பெண்கள் பெரும்பாலும் கருநீலம் அல்லது கருப்பு நிற ஜீன்ஸ்களையே  அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கொள்ளையில் ஈடுபட்டுள்ள பெண்கள் அனைவரும் குஜராத்தில் இருந்து வந்தவர்கள். இதற்காக இவர்கள் 2000 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு முசாபர்பபூருக்கு வந்துள்ளார்கள் என்று கூறினார்.

மேலும், இந்த 30 பேர் கொண்ட கும்பல்  6 பேர் கொண்ட 5 குழுக்களாக இவர்கள் பிரிந்து சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதும் , இவர்கள் ஆங்காங்கே உள்ள ஓட்டல்களில் ரூம்போட்டு தங்கி,  கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார்.

இவர்கள் கொள்ளையடிப்பதில் வெறித்தனமாக தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். அவ்வளவு துணிச்சல் மிக்கவர்கள் என்றும். இவர்கள் இவ்வாறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருவதாகவும்ஆ ட்சியர் விவேக்குமார் கூறினார்.

[youtube-feed feed=1]