ம.பி.,

த்தியபிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்த தகவல்கள் பொய்யானது என்று தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது.

மத்தியபிரதேசத்தில் பாரதியஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் பதவியில் உள்ளார். சட்டஅமைச்சராக நரோட்டம் மிஸ்ரா இருக்கிறார்.

இங்க கடந்த 2013ம் ஆண்டு ம.பியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தற்போது அமைச்சராக இருக்கும் நரோட்டம் மிஸ்ராமீது தேர்தல் செலவு குறித்து, தேர்தல் கமிஷனில் புகார் கூறப்பட்டது.

2013ம் ஆண்டு  ம.பி.யில் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில், பணம் கொடுத்து, தனக்கு ஆதரவாக செய்தி வெளியிடச் செய்ய பணம் கொடுத்ததாக புகார் வெளியானதை தொடர்ந்து, அவரது தேர்தல் கணக்கில் அதற்கான பணம் சேர்க்கப்பட்டது.

பின்னர் அவரது தேர்தல் செலவு குறித்து கணக்கு தாக்கல் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. அதையடுத்து நரோட்டம் மிஸ்ரா தேர்தல் கமிஷனில், தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்தார்.

அந்த கணக்கு தவறானது என்று தற்போது தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற  2008 சட்டசபைத் தேர்தலிலும், இதுபோன்ற முறை கேட்டில் சிக்கியதால், தேர்தல் ஆணையத்தின் கண்டனத்திற்கு ஆளானவர் நரோட்டம் மிஸ்ரா என்பது குறிப்பிடத்தக்கது.