பாட்னா :
தேசிய அளவில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆனால் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

‘’பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வென்றால், அந்த கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளிப்போம்’’ என லோக்ஜனசக்தி தெரிவித்துள்ளது.
லோக்ஜனசக்தி, மாநில அளவில் ஒரு நிலையும், தேசிய அளவில் ஒரு நிலையும் எடுத்துள்ள நிலையில், பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஐக்கிய ஜனதா தளம், கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
‘’லோக்ஜனசக்தி கட்சியின் நிலைப்பாடு பீகார் வாக்காளர்களை குழப்பமடைய செய்யும். எனவே லோக்ஜனசக்தி கட்சியை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும்’’ என ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தும் என அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
-பா.பாரதி.