பீகார்:

முதல்வர் நிதிஷ்குமார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த எம்எல்ஏக்கு, கட்சித் தொண்டர்கள் கால் பிடித்து,  மசாஜ் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜேடியு எம்எல்ஏ கவுசல் யாதவுக்கு கால் பிடித்துவிடும் கட்சித் தொண்டர்கள்

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மாநில முதல்வராக நிதிஷ்குமார் இருந்து வருகிறார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தவும், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) பீகாரை தொடர்ந்து ஆட்சி செய்யும் என்று ஜே.டி.யு  கட்சி தொண்டர்களுக்கு உறுதியளிக்கும் வகையில் ‘காரிய கார்த்த சம்மலன்’ என்ற பெயரில் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பொதுக்கூட்டதிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த பொதுக்கூட்டத்துக்கு மாநிலம் முழுவதும் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தொண்டர்கள் பாட்னாவில் குவிந்திருந்தனர்.  அப்போது நவாடா தொகுதி எம்எல்ஏ கவுசல் யாதவ்வும் தனது தொகுதி கட்சியினருடன் அங்கு வந்திருந்தார்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, அங்கிருந்த மரத்தின் அடியில், கவுசல் யாதவ் பாடலைக் கேட்டுக் கொண்டே   ஹாயாக படுத்திருந்தார். அவரது கால்களை கட்சித்தொண்டர்கள் மசாஜ் செய்து வந்தனர்…

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது… இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் எம்எல்ஏவின் செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது..

வீடியோ உதவி: ஏஎன்ஐ