மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 1 படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் விழாவில் கலந்து கொண்டார், தவிர விழாவுக்கு வந்திருந்த ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
Superstar @rajinikanth in #PONNIYINSELVAN Trailer and Songs Launch
With @ManiRatnamFC @my_aishwarya #AishwaryaRaiBachchan #aishwaryarai #Rajinikanth #PonniyinSelvantrailer #PonniyinSelvan1 #jailer #Chennai pic.twitter.com/mvxJw3TB30— Pratheesh Sekhar (@propratheesh) September 6, 2022
நிகழ்ச்சியில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, பிரபு, ஜெயராம், பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
படத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் இதில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள் பேசியிருந்தனர்.
This is hilarious 🤣😂😂 jayram is 😂✨gold. pic.twitter.com/yJLqnVmlxs
— 𝙅𝙚𝙣𝙣𝙞 𝙛𝙚𝙧 𝙗𝙡𝙚𝙨𝙨𝙮 (@Jenniferblessy_) September 7, 2022
மேடையில் பேசிய நடிகர் ஜெயராம், நாள் முழுக்க நடிகர் பிரபுவை பட்டினி போட்டதில் அவருக்கு தன் மீது வந்த கோபத்தை பிரபு குரலில் மிமிக்ரி செய்து அசத்தினார்.
ஜெயராமின் பெர்ஃபாமன்ஸை ரஜினிகாந்த், மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் ரசித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.