இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸ் முடிவில் 455 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து அணி 255 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணிக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ்-யை தொடர்ந்தது. 2-ஆவது இன்னிங்சில் 63.1 ஓவர்களில் 204 ரன்கள் குவித்து, 405 ரன்கள் முன்னிலை பெற்றது.
இங்கிலாந்து அணி, 405 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. நான்காவது நாள் ஆட்ட முடிவின் போது 59.2 ஓவர்களுக்கு 2 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தது. உணவு இடைவேளை வரை 93 ஓவர்களுக்கு 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர். உணவு இடைவேளை முடிந்தவுடன் வந்தவேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். மொத்தம் 97.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி.
இப்போட்டியில், வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ளது.