ஜெயம் ரவியின் 25-வது படத்தை, லக்‌ஷ்மண் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

பாலிவுட் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்த நிதி அகர்வால், இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். தம்பி ராமையா, ராதாரவி, சதீஷ், சரண்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டட்லி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை, இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அத்துடன், ஜெயம் ரவி சினிமாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆன நிகழ்வும் கொண்டாடப்பட்டது.

[youtube-feed feed=1]