திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 66 மணி நேரத்தைக் கடந்துள்ளது. அவரைப் பத்திரமாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSujith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.
இது தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பதிவில், ” இன்னும் எத்தனைக் குழந்தைகள் ஆழ்துளைக் கிணறுகளுக்கு இரையாகப் போகிறார்கள்? இந்த தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப்படக் கூடாது. சுஜித் உறுதியுடனும் உடல்நலத்துடனும் மீண்டுவர என் பிரார்த்தனைகள்” என்று தெரிவித்துள்ளார்.