போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு இன்று திடீரென சென்று அவரை சந்தித்தார் சசிகலா.
இதுகுறித்து பின்பு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது.
தாதா சாஹிப் பால்கே விருது வாங்கியதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கும் சமீபத்தில் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினியின் உடல் நலன் குறித்தும் விசாரித்தார் என்றும் கூறப்பட்டது.
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ரஜினிகாந்தை, அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்க முயற்சித்துவரும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சந்தித்தது தமிழக அரசியலில் மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.