சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஜெ.மறைவைத்தொடர்ந்து, அவருக்கு சொந்தமான போயஸ்கார்டன் இல்லம், நினைவு இல்லமாக தமிழக அரசு அறிவித்து. அதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியது. இதைத்தொடர்ந்து ,கடந்த மாதம், போயஸ் தோட்ட இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு உத்தரவை எதிர்த்தும் தீபக், தீபா ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சேஷசாயி, போயஸ் கார்டன் இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்தது. அதேசமயம் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு வழக்குகளை முடித்துவைத்தது.
போயஸ் இல்லத்தை கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா, தீபக் வழக்குகளைச் சேர்த்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.