சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசா ரணை ஆணையம் அப்போலோ மருத்துவர்கள் 10 பேருக்கு விசாரணைக்கு அஜராக சம்மன் அனுப்பி உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்பாக, விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் அப்போலோ கோரிக்கைகைளை சென்னை உயர்நீதி மன்றம் கடந்த வாரம் நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து அப்போலோ மருத்துவர்களுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அப்போலோ மருத்துவர்கள் 10 பேரும் மருத்துவமனை மருத்துவ அலுவலர் மற்றும் மேலாளர் மோகன் ரெட்டி ஆகியோர், வரும் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.