சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78–வது பிறந்த நாளை விழாவையொட்டி, அதிமுக சார்பில்  பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 25–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஜெயலலிதாவின் 78–வது பிறந்த நாளை முன்னிட்டு, 25–ந் தேதி புதன் கிழமை முதல் 27–ந் தேதி — வெள்ளிக் கிழமை வரை 3 நாட்கள், புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 78–வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிகளை, கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

யார்–யார் எந்ததெந்த இடங்களில் பேசுகிறார்கள் என்ற பட்டியலை கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]