சென்னை:

றைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மற்றும் ஜெயலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகளுக்கும்  மேலாக சிறையில் இருந்து வரும் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து சுமார் 1500 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அத்துடன் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மாநிலம் முழுவதும் 1,500 சிறை கைதிகளை விடுதலை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை உட்பட்ட நகரங்களில் 9 மத்திய சிறைச்சாலைகள், மற்றும் 126 கிளை சிறைகள் உட்பட 135 சிறைகள் உள்ளன. இதில் 19 ஆயிரம் ஆண், பெண் கைதிகள் உள்ளனர். இவர்கள் ஆயுள் தண்டனை, மரண தண்டனை, கடுங்காவல், சாதாரண சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களில் பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக  பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகள், முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்களில், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சிறையில் 10ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நன்னடத்தை கைதிகளை விடுவிக்க சிறைத்துறையும் அனுமதி வழங்கி உள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி,  ஆயுள்தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வந்த சிறைக் கைதிகளை சட்டத்துக்கு உட்பட்டு மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறியிருந்தார்.

இந்தந நிலையில், இன்று தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 1500 கைதிகள் விடுதலையாகலாம் என கூறப்படுகிறது. இதற்கான அறிக்கையை சிறைத்துறை ஏற்கனவே தமிழக அரசுக்கு வழங்கி உள்ளதாகவும், அதன்படி,  மதுரை சிறையில் இருந்து 340 கைதிகளும், பாளையங்கோட்டை சிறையில் இருந்து 300  பேர் என சுமார் 1,500 கைதிகள் இன்று வெளியே வர உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளையும் நன்னடத்தை முறையில் விடுவிக்கலாம் என சிறைத்துறை அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

சிறை கைதிகளை விடுதலை செய்ய தமிழக எதிர்க்கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள் நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலான சிறைக்கைதிகள் விடுதலை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து அரசு எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிக்கையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.