ஜெயலலிதா கைநாட்டு… பம்மிய நெட்டிசன்கள்
நெட்டிசன்
தமிழகத்தில் நடைபெற இருக்கும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு. கட்சியின் சின்னம் ஒதுக்க கட்சியின் பொதுச்செயலாளர் படிவம்-பி என்ற பாமில் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும்.
அப்படி கையெழுத்து போடவில்லை என்றால், அந்த வேட்பாளருக்கு கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னம் ஒதுக்காமல் சுயேச்சைகளுக்கு ஒதுக்கும் ஏதாவது ஒரு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி விடும்.
அதற்காக போட்டியிடும் கட்சியின் தலைமை, வேட்பாளருக்கு  தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை ஒதுக்க கோரி ‘Form-B’ ல்  கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும் என்பது தேர்தல் விதி.
தற்போது, தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்படும் படிவம் பி-யில் முதல்வர் கையெழுத்துக்கு பதில், அவருடைய கைரேகை (கைநாட்டு) இடப்பட்டிருக்கிறது.
இது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதல்வர் நன்றாக பேசுகிறார், சாப்பிடுகிறார் என்று சொல்கிறார்கள்… ஆனால் கைநாட்டு போட்டிருக்கிறாரே என ஆச்சரியத்தோடு அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொள்கிறார்கள்…. மூச்…….
இருந்தாலும், முதல்வர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்கள் மூலம் கலாய்த்து வந்த நெட்டிசன்கள், முதல்வர் கை நாட்டு குறித்த அமைதி காத்து வருகிறார்கள்.
எதற்கெல்லாமோ கருத்துக்களை வாரி இறைக்கும் வலைதள தத்துவ ஞானிகள், ஜெயலலிதா கைநாட்டு  குறித்து பம்மி வருவது ஏனோ….?
தமிழக சைபர் கிரைம் குறித்து பயம் போலும்….  கைது பயமா? அல்லது கட்சிக்காரர்கள் பயமா? என்னமோ நடக்குது….. போங்கப்பா..  நீங்களும்… உங்கள்………………..