ஜெயலலிதாவை நலம் விசாரிக்க அமித்ஷா, அருண்ஜெட்லி  அப்பல்லோ விரைந்தனர்

Must read

தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய பார்க்கவும் இந்தியா முழுவதிலுமிருந்தும் தலைவர்கள் சென்னைக்கு வந்தபடி இருக்கிறார்கள்.
large_vlcsnap-2016-10-12-12h57m40s45
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவை நலம் விசாரிக்க நேரில் வருவார் என்ற தகவல் பரவியது.  இதற்கிடையேஜெயலலிதாவின் நண்பரும், மத்திய நிதி அமைச்சருமான அருண்ஜெட்லி ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று சென்னை வந்தடைந்தார். அவருடன் பாஜகவின் தலைவர் அமித்ஷாவும் வந்துள்ளார்.
vlcsnap-2016-10-12-12h57m27s164
அவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.இல.கணேசன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
அவர்கள் அப்பல்லோ மருத்துவமனைககு விரைந்தனர்.
 
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article