சென்னை:
ப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா, இன்னும் இரு வாரத்தில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
download
முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேறிவரும் அவருக்கு தற்போது பிஸியோதரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த  மேரி, சீமா ஆகிய இரண்டு பிஸியோதெரப்பிஸ்டுகள் வந்திருக்கிறார்கள். இவர்கள் கடந்த 22 நாட்களாக ஜெயலலிதாவுக்கு பிஸியோதெரபிஸ்ட்  சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அப்பல்லோ அருகே உள்ள நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். தற்போது ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேறறம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் போயஸ் இல்லம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. .

மேரி, சீமா
மேரி, சீமா

இதற்காக போயஸ் இல்லத்தில், மருத்துவமனைக்கான சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூர் பிஸியோதெரப்பிஸ்டுகள் போயஸ் கார்டனுக்குச் சென்று அவற்றை பார்வையிட்டு வந்தார்கள் என்று கூறப்படுகிறது.
இன்னும் இருவார காலத்தில் முதலவர் டிஸ்ஸார்ஜ் ஆவார் என சொல்லப்படுகிறது.
சிங்கப்பூர் பிஸியோதெரபிஸ்டுகள் இருவரும், அடுத்தவாரம் நாடு திரும்ப இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அவர்கள் தங்களது சிங்கப்பூர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்திருப்பதாகவும் செல்லப்படுகிறது.
மேலும் சமீபத்தில் அப்பல்லோ சேர்மன் டாக்டர் பிரதாப் சி ரெட்டி , ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்பதை அவரே தீர்மானிப்பார் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.