முதல்வர் உடல் தற்போது சென்னை அண்ணாசாலையில் உள்ள ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் சாரை சாரையாக சென்னை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
அண்ணாசாலை முழுவதும் மனித தலைகளாகவே தென்படுகிறது. காலை முதலே பிரபல நடிகர்கள், முக்கிய அரசு அதிகாரிகள், கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள இரங்கல் செய்தியில், WE LOST OUR GREAT LEADER என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய நாடே தனது வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் விஜய், நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் அஜித்குமார் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், அங்கிருந்து இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார்.
நடிகரும், மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,இந்தியாவின் இரும்பு பெண்மணி மறைந்து விட்டார் என்று கூறி உள்ளார்.
இசை அமைப்பாளர் இளையராஜா, நடிகர் விவேக் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.