சென்னை,
முதல்வர் ஜெயலலிதா நன்றாக பேசி வருகிறார் என்று அப்ப அப்போலோ மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது.
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 10 நாட்கள் கழித்து 10வது அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி இரவு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது.
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதா வைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் சீரான இடைவெளியில் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அவரது உடல் நிலை குறித்து 9 அறிக்கைகளை அப்போலோ நிர்வாகம் வெளியிட்டு இருந்தது.
கடந்த 10-ஆம் தேதி 9-ஆவது அறிக்கை வெளியாகி இருந்த நிலையில் இன்று 10-ஆவது அறிக்கையை நேற்று இரவு அப்போலோ நிர்வாகம் வெளியிட்டது.
அதில் “முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் நன்றாக பேசி வருகிறார். உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை, இதய சிகிச்சை, சுவாச சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.