சென்னை:
ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா ஆட்சி, அதிகாரத்துக்கு வரக் கூடாது என்றும் 30 பேரை பழி வாங்கத் துடிப்பதாகவும் கேரள ஜோதிடர் வேங்கடசர்மா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சை உள்ளது. இந்நிலையில் மக்கள் சந்தேகிப்பது உண்மை என்பதை நிருபீக்கும் வகையில் தனியார் தமிழ் செய்தி சேனல் நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த ஜோதிடர் வேங்கட சர்மா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் ஜோதிடர் கூறுகையில், ‘‘ஜெயலலிதாவின் ஆன்மாவுடன் கடந்த 3 மாதங்கள் பேசி வருகிறேன். அவர் மரணம் இயற்கையானது அல்ல. அவர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவர் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இருப்பார்.
27 பேர் முதல் 30 பேர் வரை பழிவாங்க அவரது ஆன்மா துடித்து கொண்டிருக்கிறது. சசிகலா ஆட்சி, அதிகாரத்துக்கு வருவதற்கு அவரது ஆன்மா விரும்பவில்லை’’ என்று தெரிவித்தார்.