சென்னை:
அ.தி.மு.க ஜெ.தீபா அணி என தனது கட்சியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தீபா செய்தியார்களிடம் இன்று கூறுகையில், ‘‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது.
பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் 19ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது. அதிமுக தற்போது தலைமை இல்லாமல் சிதறிக் கிடக்கிறது. கட்சிக்கு தொண்டர்களின் பலம் அவசியம். எங்களிடம் தொண்டர்கள் பலம் உள்ளது’’ என்றார்.
Patrikai.com official YouTube Channel