சென்னை:
தமிழக முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லத் தேவையில்லை என முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர ஜெயலலிதா நலமாக உள்ளார் என்றும், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல தேவையில்லை என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை ஏழு மணி அளவில் செய்தியாளர்களிடம் பேசிய, அப்போலோ மருத்துவர்கள்,
கடந்த 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயல்லிதாவுக்கு நீர் சத்து குறைபாடு இருந்ததாகவும் 23 ஆம் தேதி காய்ச்சல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
முதல்வருக்கு மீண்டும் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சாதாரண உணவுகளை அவர் உட்கொண்டு வருகிறார் என்று தெரிவித்தனர்.
மேல் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்படுவார் போன்ற பல தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை. மேல் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்வதற்கு தற்போது அவசியமில்லை என்றனர்.
அனைத்து சிகிச்சைகளுக்கும் தமிழக முதல்வரின் உடல் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. மேலும், நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
உடல் சுகவீனத்திலிருந்து தமிழக முதல்வர் மீண்டு வர இன்னும் அதிக நாட்கள் ஓய்வெடுக்க வேண்டி உள்ளது. இன்னும் சில நாட்களில் அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார். அதன்பின், தனது அலுவலக கடமைகளை தொடர்வார் என்று தெரிவித்துள்ளனர்.