சென்னை,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் மருத்துவர் பாலாஜி இன்று 2வது தடவையாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 7ந்தேதி  ஆணையத்தில் முதன்முறையாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்நிலையில், அவரை மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதையடத்து,  இன்று 2வது முறையாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார்.

ஏற்கனவே ஆஜரானபோது, அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதிக்கான  தேர்தல் வேட்பு மனுக்களில் ஜெயலலிதா சுய நினைவுடனே கையெழுத்து இட்டால் என்றும், அப்போது, தன்னுடன் சசிகலாவும் மட்டுமே அங்கு இருந்ததாகவும், அரசு மருத்துவக் குழுவோ, அமைச்சர்களோ ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் பார்க்கவில்லை என கூறி  இருந்தார்.

விசாரணை ஆணையத்தில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், மருத்துவர் பாலாஜி இன்று 2வது முறையாக ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, சிகிச்சைகளை கண்காணிக்க அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட குழுவில் மருத்துவர் பாலாஜியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.