சென்னை.
ஜெயலலிதாவின் மறைவையொட்டி, இன்று சென்னை முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகத்தில் இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் சென்னை நகரில் கடைகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
amma-unvagam
பஸ்கள் இயங்காததால் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
நகரின் முக்கிய சாலைகளில் ஆட்டோ ரிக்‌ஷா போக்குவரத்தும் வெகு குறைவாக காணப்படு கிறது.
இதற்கிடையே, ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள உணவகங்களும் நகரின் பிரதான பகுதி களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள மக்கள் உணவு கிடைக்காமல் திண்டாட நேரிட்டுள்ளது.
குறிப்பாக, எழும்பூர் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளதால் மாற்று ரெயில்களுக்காக இங்கு காத்து கிடப்பவர்கள் பசியால் தவிக்க நேர்வதை தடுக்கும் வகையில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் வடக்கு வாயில் பகுதியில் உள்ள அம்மா உணவகம் இன்றும் இயங்கி வருகிறது.
பெரும்பாலான அம்மா உணவங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இன்று காலையில் இருந்தே   டிபன், மதிய உணவான எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை பணம் ஏதும் பெறாமல் இலவசமாகவே அளிக்கப்பட்டு வருகிறது.