சென்னை,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் கணவர் மாதவன் பிரம்மான பத்திரம் தாக்கல் செய்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதால், அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை எழிலகத்தில் தனி அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஜெ மரணம் குறித்த ஏதாவது ஆதராம் இருந்தாலோ அல்லது ஏதாவது கருத்து தெரிவிக்க வேண்டும் என்றாலோ விசாரணை கமிஷனுக்கு ஒத்துழைப்பு தரலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் இன்று காலை திடீரென ஜெயலலிதா சமாதிக்கு வருகை தந்தார். அங்கு ஒரு மனுவை வைத்து வணங்கினார். பின்னர் அந்த மனுவை விசாரணை ஆணையத்தில் கொடுத்தார்.
அந்த மனு, ஜெயலலிதா மறைவு குறித்த பிரமாண பத்திரம் என்றும், அதில், 18 கேள்விகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரம்மான பத்திரம் குறித்த மனுவை விசாரணை ஆணைய பதிவாளரிடம் தாக்கல் செய்தார்.