சென்னை:
றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு காலமானார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்து அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மாலை 4.10 மணி அளவில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பெரும்பாலான மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், கவர்னர்கள் மறைந்த முதல்வர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து மாலை 4.20 மணி  முதல்வரின் உடல் முப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் ஜெயலலிதா உடலை  கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டு ராணுவ பீரங்கியில் இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்து சரியாக 4.30 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
லட்சக்கணக்கான மக்கள் சாலையின் இரண்டு புறங்களில் நின்றுகொண்டு மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஊர்வலத்தில் பீரங்கி வண்டியை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள் செல்கிறார்கள்.